கனவுகள்
என்னை பற்றி
- Lakshmijothi92
- என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.
Monday, October 11, 2010
அன்பு;
உன்னை காணும் வரை சொர்கத்தை பார்த்ததுயில்லை,
உன்னை கண்ட பின் சொர்கமே தேவையில்லை,
உன் அன்பு மட்டும் போதும் நான் வாழும் வரை!
*********
மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது,
நிஜமானால் நீ மட்டும் போதும்,
உறவாக அல்ல உயிர் தரும் நட்பாக,
***********
பூவின் மொட்டுகளை போல மௌனமாக,
இருக்காமல் மலர்ந்த பூக்களை போல,
சிரித்து கொண்டே இருங்கள் ,
***********
Friday, October 8, 2010
உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பச்சை மளகாய் - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடலைமாவு - கால் கப்பு
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
செய்முறை;
உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் போட்டு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். உருளைக்கிழங்கு கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, கடலை மாவு கலவையில் முக்கி எண்ணையில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.
ஊட்டச்சத்து விவரங்கள்;
உருளைக்கிழங்கில் இருந்து உடனடி சக்தி கிடைக்கும். இது எளிதில் ஜிரணமாகக் கூடியது. எனவே இதனை இரண்டு வயதிலிருந்து கொடுக்கலாம். பச்சை மிளகாயில் வைட்டமின் 'சி' இருப்பதால், நாம் ணாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் தன்மையை அதிகருக்கிறது. மாலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது.
கலக்கல் காமெடி
ஜோக்ஸ்1.உட்கார முடியாத தரை -புளியோதரை
2.உன்ன முடியாத மீன் - வீன்மீன்
3.பேசமுடியாத வாய் - செவ்வாய்
4.தின்ன முடியாதபன் -ரிப்பன்
5.பன் மேலே தண்ணீர் உற்றினால் என்ன ஆகும்?
பன்னீர் ஆகும்
6.உடுத்தி கொள்ள முடியாத டிரஸ்-அட்ரஸ்
7.எச்.எம்.டி வாச்சியில் ஏன் முள் இல்லை -அது சைவம்கிறதால்
8.போட முடியாது டவ்ஸ்ர்- புல்டவ்ஸர்
9.கப்பல் போவது எதுல டீசல்லா பெட்ரொல்லா-தண்ணீரில் போவது
Thursday, October 7, 2010
அன்பானவன்
என்னுள் புதைந்து இருந்த.
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.
என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.
எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!
கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.
குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்)
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.
என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.
எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!
கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.
குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்)
Saturday, October 2, 2010
படித்ததில் பிடித்தது
கண்களில் படுவதெல்லாம் இதயத்தில்இடம் பிடிப்பதில்லை..
இதயத்தில் இடம் பிடிப்பதெல்லாம்
கண்களின் அருகில் இருப்பில்லை...
உன்னைப் போல.!
********
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும்
நேசிக்க முடியாது...!
நேசிகின்ற எல்லோரையும்
பார்க்க முடியாது....!
********
விழுந்த இடன் மறைந்து போக
நான் மழை துளி இல்லை...!
உன்னுடன் இருதி வரை..
இருக்கும் கண்ணீர் துளி....
********
உண்மையான காதலை இழந்த பின்பும்..
அதை மறக்காமல்..
நினைத்து கொண்டு வாழும்
அணைவரும்..
ஒரு உயிர் உள்ள ''தாஜ்மஹால்'' தான்...
********
எனக்கு பிடித்தது
கவிதைநல்ல அன்பு தென்றல் காற்றை போன்றது...!
அதை பார்க்க முடியாது..!
ஆனால் உணர முடியும் நான் உணருகிறேன் ''உன்னால்''
********
நிழல்கள் கூட வெனிச்சம் உள்ளவரை தான் தனக்கு வரும்!
உண்மையான ''நட்பு'' உயிர் உள்ளவரை துணைக்கு வரும்...!
********
நீ'' நேசிக்கும் போது நேசிப்பவன் நண்பன் அல்ல''நீ ''வெறுக்கும் போது நேசிப்பவன் உண்மையான
நண்பன்''
இது தான் உண்மையான நட்பு...
********
நீ நேசிப்பவர்க்கு உன் இதயத்தில்
இடம் கொடு.
உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திருக்கு உன் உயிரையும்
சேர்த்து கொடு...
********
அருகில் இருப்பவர் எல்லாம் அன்பானவர் இல்லை...
அன்பானவர் எல்லாம் அருகில் இருப்பதில்லை
நம்மை போல!
********
நான் கண்ணீர் மாதிரி...!
உன் சந்தோஷத்தில் உன் கூட
இருக்க மாட்டேன்.
ஆனால்
உன் கஷ்டத்தில் எப்போழுதும்
உன் கூடவே இருப்பேன்
*******
Wednesday, September 29, 2010
இலக்கியச் சின்னங்கள்
இலக்கியச் சின்னங்கள்
தாஜ்மகாலை 'உறைந்த கண்ணீர்த் துளி' என்று கவிஞர் ஒருவர் உருவகப்படுத்தியிருப்பார். தமிழகத்தில் இலக்கியம் புனைந்தவர்களின் நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும்பொருட்டு,அரசு பல நனைவுச்சின்னங்களை உருவாக்கி வருகிறது. ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'' என்ற மக்கள் கவிஞர்
பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் நினைவு இல்லம். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கு காற்று இன்னும் மார்பில் அடித்துக்கு கொள்ளும் கயத்தாரில் நினைவிடம் பாஞ்சாலக்குறிச்சியில் குறியீட்டுக் கோட்டை! ஒரு தமிழன் கப்பலோட்டினான். மற்றவர்கள் அக்கப்பலை ஓட்டினார்கள். செக்கிழுத்த செம்மலுக்கு, சிதம்மரனாருக்கு
ஒட்டபிடாரத்தில் நினைவு இல்லம். சுவடிகளில் பதிந்திருந்த இலக்கியத்தை தாள்களுக்கு மாற்றிய தமிழ்தாத்தாவிற்கு உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம். அவனும் அவளும் விரும்மிய நாடு படைத்த நாமக்கல் கவிஞருக்கு நினைவு இல்லம். பரிதிமாற்கலைஞருக்கும் ஒரு நினைவு மண்டபம். ''செய்யும் தொழிலே தெய்வம்'' என்று பாடிய பட்டுக்கோட்டைக்கும்
மணிமண்டபம். இலக்கியத் தமிழை இளக்கிய தமிழாய் மாற்றிய கண்ணதாசனுக்கும் நினைவு மண்டபம் என்று காவியங்களை காலப்பெட்டகத்தில் பத்திரப்படுத்தும் முயற்சிகள்
தொடர்கின்றன.
இலகிய சுற்றுலா
இன்ப சுற்றுலா!!
சுற்றுலா இல்லாத வாழ்க்கை பூங்காற்று இல்லாத பூங்கா,நீர்ல்லாத அருவி,கனியில்லாத மரம்,கவிதையில்லாத இலக்கியம் ஒரே இடத்தில் நடந்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட எதுவும் உலக
தாஜ்மகாலை 'உறைந்த கண்ணீர்த் துளி' என்று கவிஞர் ஒருவர் உருவகப்படுத்தியிருப்பார். தமிழகத்தில் இலக்கியம் புனைந்தவர்களின் நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும்பொருட்டு,அரசு பல நனைவுச்சின்னங்களை உருவாக்கி வருகிறது. ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'' என்ற மக்கள் கவிஞர் பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் நினைவு இல்லம். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கு காற்று இன்னும் மார்பில் அடித்துக்கு கொள்ளும் கயத்தாரில் நினைவிடம் பாஞ்சாலக்குறிச்சியில் குறியீட்டுக் கோட்டை! ஒரு தமிழன் கப்பலோட்டினான். மற்றவர்கள் அக்கப்பலை ஓட்டினார்கள். செக்கிழுத்த செம்மலுக்கு, சிதம்மரனாருக்கு
ஒட்டபிடாரத்தில் நினைவு இல்லம். சுவடிகளில் பதிந்திருந்த இலக்கியத்தை தாள்களுக்கு மாற்றிய தமிழ்தாத்தாவிற்கு உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம். அவனும் அவளும் விரும்மிய நாடு படைத்த நாமக்கல் கவிஞருக்கு நினைவு இல்லம். பரிதிமாற்கலைஞருக்கும் ஒரு நினைவு மண்டபம். ''செய்யும் தொழிலே தெய்வம்'' என்று பாடிய பட்டுக்கோட்டைக்கும்
மணிமண்டபம். இலக்கியத் தமிழை இளக்கிய தமிழாய் மாற்றிய கண்ணதாசனுக்கும் நினைவு மண்டபம் என்று காவியங்களை காலப்பெட்டகத்தில் பத்திரப்படுத்தும் முயற்சிகள்
தொடர்கின்றன.
இலகிய சுற்றுலா
இன்ப சுற்றுலா!!
சுற்றுலா என்பதுமே நம் கண்முன் நிற்பவை மலர் கண்காட்சி, ஊட்டி, கொடைகானல்,மாமல்லபுரம்,மெரினாபீச்,முதுமலை சரணாலயம் போன்றவை நம் கண்முன் சிறகடித்து பறக்கக் கூடியவை. ஆனால்
இந்த சுற்றுலா சற்று மாறுபட்டதாக அமையும் அதையும் காண்போம்.
சுற்றுலா இல்லாத வாழ்க்கை பூங்காற்று இல்லாத பூங்கா,நீர்ல்லாத அருவி,கனியில்லாத மரம்,கவிதையில்லாத இலக்கியம் ஒரே இடத்தில் நடந்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட எதுவும் உலகஇலக்கியமாக உயர்வு பெறவில்லை. இலியட்,ஒடிசி ஆகிய இரண்டு மகாகாவியங்களுமே பல இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவப்பிழிவுகளின் சாரங்கள். சைரன்களின் இசையையும் நுகர வேண்டும்;
தடமும் மாறக்கூடாது என்ற திடமான உள்ளத்தால் 'யுலிசிஸ்'தன்னை கட்டிப்போட வைத்து வீரர்களின் காதில் பஞ்சடைத்து அந்த இசையை நுகர்ந்ததாக ஒடிசி உரைக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் அத்தனை மகாகாவியங்களுமே இடம்விட்டு இடம்பெயர்ந்த சம்பவங்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை.'டெம்பஸ்ட் 'நாடகத்தில் காலனி ஆதிக்கம் குறித்தும், பெர்முடா முக்கோணம் குறித்தும் பூடகக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.சொர்கத்திலிருந்து நெருப்பை மனிதர்களுக்கு கொண்டுவந்து கொடுத்ததால் 'புரோமத்தியஸ்' சபிக்கப்பட்டதாக கிரேக்கப் புனைவியல் கூறுகிறது;
சுற்றுலாவின் வகைகள்
1.அலையகச் சுற்றுலா, 2.மலையகச் சுற்றுலா ,3.கலையகச் சுற்றுலா , 4.வரலாற்றுச் சுற்றுலா,
5.வர்த்தகச் சுற்றுலா , 6.மருத்துவச் சுற்றுலா , 7.மனமகிழ்ச் சுற்றுலா ,8.ஆய்வுச் சுற்றுலா,
9.ஓய்வுச் சுற்றுலா, 10.பண்பாட்டுச் சுற்றுலா, 11.பாரம்பரியச் சுற்றுலா,12. சுற்றுச்சூழல் சுற்றுலா,
13.சுறுசுறுப்புச் சுற்றுலா, 14.இலக்கியச் சுற்றுலா, 15.இதிகாசச் சுற்றுலா, 16.கல்விச் சுற்றுலா,
17.தொல்வியல்ச் சுற்றுலா, 18.ஆன்மிகச் சுற்றுலா, 19.சமயச் சுற்றுலா,20. கனாகச் சுற்றுலாய
21.ஊரகச் சுற்றுலா, 22.விளையாட்டுச் சுற்றுலா,23.வீரதீரச் சுற்றுலா, 24.சாகசச் சுற்றுலா,
25.புனைவியலச் சுற்றுலா,26. பொழுதுபோக்குச் சுற்றுலா, 27அருவிச் சுற்றுலா,28. பண்டிகைச்
-சுற்றுலா,29. பலகாரச் சுற்றுலா, 30இன்பச் சுற்றுலா என்று எண்ணற்ற சுற்றுலாக்கள் இடம்
-பெற்றுள்ளன.
கம்ப இராமயணத்திலேயே இவற்றில் பல சுற்றுலாக்கனைப் பார்க்க முடியும். இராமன் விசுவாமித்திரரோடு காட்டுக்குச் சென்றது சாகசச் சுற்றுலா. வில்லை உடைத்துப் பலத்தை நிரூபித்தது
விளையாட்டுச் சுற்றுலா. தந்தையின் வாக்கைக் காப்பற்ற மேற்கொண்டது கானகச் சுற்றுலா. கடந்தது கங்கை சுற்றுலா. சீதைக்காக மானைப் பிடிக்க முயன்று சுற்று சூழல் சுற்றலாவைப் பேண
மறந்ததால்தான், இராவணனோடு வீரதீச் சுற்றுலா செல்வதற்காக.
தமிழகத்தின் இலக்கியச் சுற்றுலா தலங்கள்
சென்னையில் வள்ளுவர்கோட்டமும், குமரிமுனையில் திருவள்ளுவரின் பிரம்மாணட சிற்பமும் செவிகளில் திருக்குறளை எதிரொலிக்கச் செய்யும் முயற்சிகள். அங்கு வந்துபோகிற ஒவ்வொருவரும்
'ஆல்பர்ட் ஸ்வைட்ஸர்'திருக்குறளைப் பற்றிக் கூறிய கருத்துக்களை நினைந்துகொள்வர் பூம்புகார் , பட்டினப்பாலையில் இடம் பெற்ற காவிரிப் பூம் பட்டினத்தை நினைவுபடுத்துகிறது. இங்கு ந-டக்கும்இந்திர விழா,
சென்னி செங்லோதுவோச்ச
கங்கைதனனைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணா
கங்கைதன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேலரி
மங்கைமாமர்ப் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி''
என்கின்ற கானல் வரிகள் கோவலன்-மாதவிக்குள் கோணல் வரிகளாய் மாறிய சிலப்பதிகாரச் சிந்தையை நினைவுபடுத்துவும் குற்றலாத்தை நெருங்கும் போதெல்லாம்
''வானரங்கள் கனிகொத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்''
என்ற குற்றாலக் குறவஞ்சிப் பாடல் நமக்குள் அருவின் குளிர்ச்சியை ஏற்படுத்தும். அருவி என்கின்ற அழகான தமிழ்ச்சொல் இருக்க நீர்வீழ்ச்சி என்கிற ஆங்கில எச்சத்தை உச்சத்தில் வைக்கும் நண்பர்களைப் பார்த்துச் சொல்லும் கவிஞர் விக்கரமாதித்யன் வரிகள் நெஞ்சில் நிழலாடும்.
''நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை யாராவது சொல்லிவிட்டால்''
பிரான்மலை என்று அழைக்கப்படுகின்ற பறம்புமலை, வாரி வழங்கய பாரியின் சொந்த நிலம்.மூவேந்தகள் தாக்கியதால் தய்தையையும் இழந்து, தரணியையும் இழந்த பாரி பகளிர் பாடியதாக எழுதப்பட்ட புறநானூற்றுப் பாடல் அங்கு செல்லும்போதெல்லாம் விழிகளின் ஓரத்தில் ஈரத்தை வரவழைக்கும்.
''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் என்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே''
முசிறியில் முரசுக் கட்டிலில் மோசிகீரனார் தூங்கியபோது அரசர் சாமரம் வீசி புலமையைப் பெருமைபடுத்திய சம்பவம் அந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.
''அரசாங்கக் கட்டடத்தில் தூக்கம் போட்ட முதல் நபர் மோசிகீரனார்தான்'' என்கின்ற ஞானக்கூத்தனின் நையாண்டியும் சிரிப்பை வரவழைக்கும்.
அதைப்போலவே ''நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுக்கொண்டிருக்கலாம்'' என்பது இயக்கத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தும்.
ராஜசுந்தரராஜன் எழுதிய ''தகுதி'' என்ற கவிதை இயற்கையின் தொடர் சங்கிலியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது;
''ஒரு பறவையிட்ட
எச்சத்தின் நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.''
சுற்றுலாவிற்ககுத் தாயாரிப்பு ;
விவேக சிந்தாமணியில் சுற்றுலாவிற்கு என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்வது என்பது குறித்து ஒரு பாடல் உண்டு.
''தண்டுல மிளகின் தூள் புளி உப்பு
தாளிதம் பார்ததும் எதேஷ்டம் தாம்புநீர் தோற்றம்
சக்கிமுக்கி கைராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முஸ்தீபு
கமற்குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி ஊசிநூல் எழுத்தாணி
கரண்ட கண்கண்ட மேற்றங்கி
துண்டும் மோரிக்காய் கரண்டி நல்லெண்ணெய்''
கோவலன் மதுரைக்குப் போனது வர்த்தகச் சுற்றுலா. சிலப்பதிகாரத்தில் மதுரை மாநகர் குறித்து வருகின்ற விவரிப்புகள் அங்கே செல்கிற போதெல்லாம் மனத்தை மகிழ்விக்கும்
பரிபாடல் முழுவதுமே வைகை நதி பெருக்கெடுத்து ஓடும் அழகை வியக்கும் பதிவுகளே. அதே வைகை ஆறும் நாம் சுற்றுச் சூழல் சுற்றுலாப் பேணாத காரணத்தால் எப்படி சிறுத்துக்
கால்வாயாக, கழிவுகளின் வாய்க்காலமாக மாறிவிட்டது என்பதைப் பார்த்தசாரதி ஆங்கிலத்தில் எழுதிய வைகை பற்றி கவிதையில் தெரிந்துகொள்ளலாம்.
''காவிரி தெண்பெண்ணை பாலாறு
தமிழ்க் கண்டதோர் வையை பொருநை நதியென
மேவிய ஆறு பலவற்றிலும் வெள்ளை
மணல் பரவிக்கிடக்கும் தமிழ்நாடு''
என்று புதிய தமிழ்நாடு பற்றிக் புகன்ற வரிகள் வருத்தத்திலும் சிரிப்பை வரவு வைக்கும்.
ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற முடியும் என்பதற்கு தமிழில் கணியன் பூங்குன்றனாரும்,ஆங்கிலத்தில் 'தாமஸ் கிரே' வும் சான்றுகள் பூங்குன்றனார் பிறந்த சவகங்கை
மாவட்டத்து மகிபாலன்பட்டி, அவர் ''யாதும் ஊரே'' என்று அறைகூவியதன் காரணத்தினாலேயே குடத்திலிட்ட விளக்காய் இருக்கிறது. அதைக் குன்றிலிட வேண்டியது சுற்றுலாத்
துறையின் கடமை. மயிலாடுதுறைக்கு அருகிலிருக்கும் தேரெழுந்தூர் கம்பர் பிறந்த இடம். அங்கிருக்கும் மணிமண்டபம் சந்தங்கள் ஒலிக்கும் தூண்களின் கூடம். தருமபுரியிலிருந்து
தகடூர் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த அதியனின் இருப்பிடம். கொல்லிமலை வல்வில் ஓரியன் அப்போதைய அரசாங்கம். அங்கே கடையேழு வள்ளல்களில் கலைக்கூடம் எழுப்பப்பட
-விருக்கிறது. கல்லணை கரிகாற்பெருவளத்தானின் கட்டடத் திறனுக்கு அத்தாட்சி.
மணிமேகலையில் கரிகாலன் முதுமை வேடமிட்டு, தீர்ப்பு சொல்லி திருப்தி ஏற்படுத்திய
''மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு''
என்ற வரிகள் மனத்தை மகிழ்விக்கும்.
நன்றி
கலைமகள் தீபாவளி மலர் 2009
Subscribe to:
Posts (Atom)









